நீ கவலைப்படாத லாஸ்லியா: வனிதா போனில் கூறிய ஆறுதல்!

 
நீ கவலைப்படாத லாஸ்லியா: வனிதா போனில் கூறிய ஆறுதல்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியாவின் தந்தை நேற்று இரவு திடீரென மரணம் அடைந்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இதுகுறித்து லாஸ்லியாவின் ரசிகர்கள், பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் ஆறுதலும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் சற்று முன்னர் வனிதா விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் லாஸ்லியாவிடம் பேசியதாகவும் அவருக்கு ஆறுதல் கூறியதாகவும் அவர் அழுது கொண்டே இருந்தாலும் தற்போது மனநிலை தேறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

losliya

மேலும் லாஸ்லியாவின் தந்தையின் உடல் கனடாவில் இருப்பதால் இந்த கொரோனா காலத்தில் அந்த உடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் இருப்பினும் அதற்கு ஒரு சில நாட்கள் ஆகும் என்றும் அவர் கூறியதாக தெரிகிறது

மேலும் லாஸ்லியா இலங்கைக்கு செல்வதற்காக விஜய் டிவி நிர்வாகம் உதவி செய்து வருவதாகவும் பயணத்துக்கு விசா உள்பட பயண ஏற்பாடுகளை கவனித்து வருவதாகவும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்

வனிதா விஜயகுமார் இந்த பதிவால் நெட்டிசன்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்


 

From around the web