பணம் சம்பாதிக்க என்ன வேணும்னாலும் செய்வீங்களா? முரட்டு குத்து படத்துக்கு நடிகை கண்டனம்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கடுமையான விமர்சன குத்துக்கள் கடந்த இரண்டு நாட்களாக விழுந்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் குத்தாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களும் தனது பங்கிற்கு ஒரு குத்து குத்தியுள்ளார். இந்த படக்குழுவினர்களுக்கு அவர் கூறியதாவது: இந்த சமூகத்தில் அனைவருக்கும் பொறுப்புணா்வு என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பது நல்ல விஷயமில்லை ஏ படம், நகைச்சுவை படம் என அனைத்து பிரிவுகளிலும்
 

பணம் சம்பாதிக்க என்ன வேணும்னாலும் செய்வீங்களா? முரட்டு குத்து படத்துக்கு நடிகை கண்டனம்இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கடுமையான விமர்சன குத்துக்கள் கடந்த இரண்டு நாட்களாக விழுந்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் குத்தாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களும் தனது பங்கிற்கு ஒரு குத்து குத்தியுள்ளார். இந்த படக்குழுவினர்களுக்கு அவர் கூறியதாவது:

இந்த சமூகத்தில் அனைவருக்கும் பொறுப்புணா்வு என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பது நல்ல விஷயமில்லை

பணம் சம்பாதிக்க என்ன வேணும்னாலும் செய்வீங்களா? முரட்டு குத்து படத்துக்கு நடிகை கண்டனம்ஏ படம், நகைச்சுவை படம் என அனைத்து பிரிவுகளிலும் படம் தயாரிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் அந்த படங்கள் நாகரீகமான முறையில் இருக்க வேண்டும். பெண்களை அவமதிப்பதும், இழிவாக பேசுவதும் தான் அடல்ட் காமெடியா? சென்சார் போர்டு இதை எப்படி அனுமதித்தது?

இயக்குனர் பாக்யராஜ் இயக்கிய படங்களிலும் அடல்ட் காமெடி காட்சிகள், வசனங்கள் இருந்தன. ஆனால் அவை ரசிக்கும் விதமாகவும், ஆபாசம் இல்லாமலும் இருந்தது. ஆனால் இந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் வெறுக்கும் வகையில் அமைந்துள்ளது’

இவ்வாறு நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் கூறியுள்ளார்

From around the web