குட்டியுடன் இணையும் "குட்டி பவானி"!

"தனுஷ் 43ம்" படத்தில் இணையும் நடிகர் மகேந்திரன்!

 
"சத்யஜோதி பிலிம்ஸில்" ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் நடிகர் மகேந்திரனின் போட்டோ !

இந்த பொங்கல் அன்று வெளியாகி  ஓடிக் கொண்டுள்ள திரைப்படம் "மாஸ்டர்". இத்திரைப்படத்தில் "தளபதி விஜய்" நடித்து இருப்பார் தளபதி விஜயுடன் திரைப்படத்தில் "நடிகை மாளவிகா மோகன்"," நடிகை ஆண்ட்ரியா" போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் "மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படும் "நடிகர் விஜய் சேதுபதி" நடித்திருப்பார். விஜய்சேதுபதி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக தோன்றிய மக்களை அசர வைத்திருந்தார்.

mahendran

அதுவும் குறிப்பாக அவர் "பவானி" என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் தன்பக்கம் இழுத்துக் கொண்டார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் பவானியின் இளம் வயது தோற்றத்தில் "நடிகர் மகேந்திரன்" நடித்திருந்தார். நடிகர் மகேந்திரனின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது ..நடிகர் மகேந்திரன் "விழா"," காலக்கூத்து" போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். 

 இந்நிலையில் நடிகர் மகேந்திரன் அசுரன் நடிகர் தனுஷின் 43வது படத்தில் நடிப்பார் என "சத்யஜோதி பிலிம்ஸ்" டிவிட்டர்  தனது பக்கத்தில்  அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தின் "பர்ஸ்ட் லுக் போஸ்டர்" வெளியாகி வைரலாக பரவிய நிலையில் "சத்யஜோதி பிலிம்ஸ்" ட்விட்டர் பக்கம் மேலும் தனுஷ் ரசிகர்களை இன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது. மேலும் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web