குஷ்புவைக் கிண்டலடித்த ரசிகர்… விட்டு விளாசிய குஷ்பு!!

இப்போது தமிழ் சினிமாவில் எப்படி நயன்தாரா இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறாரோ, அவ்வாறு 80 களில் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் நடிகை குஷ்பு, கொஞ்ச நஞ்ச ஃபேன்ஸ் இல்லீங்க, கோயில் கட்டும் அளவு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தது. அழகான குழந்தைபோல் கொழுகொழுவென இருந்ததாலோ என்னவோ இட்லிக்கு எல்லாம் குஷ்பு இட்லி என்று பெயர் வைத்தனர். மும்பையில் பிறந்து வளர்ந்தவராயினும் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு நம்ம தமிழ்நாட்டுப்
 
குஷ்புவைக் கிண்டலடித்த ரசிகர்… விட்டு விளாசிய குஷ்பு!!

இப்போது தமிழ் சினிமாவில் எப்படி நயன்தாரா இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறாரோ, அவ்வாறு 80 களில் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் நடிகை குஷ்பு, கொஞ்ச நஞ்ச ஃபேன்ஸ் இல்லீங்க, கோயில் கட்டும் அளவு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தது.

அழகான குழந்தைபோல் கொழுகொழுவென இருந்ததாலோ என்னவோ இட்லிக்கு எல்லாம் குஷ்பு இட்லி என்று பெயர் வைத்தனர். மும்பையில் பிறந்து வளர்ந்தவராயினும் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு நம்ம தமிழ்நாட்டுப் பெண் ஆகிவிட்டார்.

சினிமாவில் இருந்து  விலகிய அவர் நடிப்புக்கு முழுக்குப் போடாமல் சீரியலில் அசத்தி வருகிறார். ராதிகாவைத் தொடர்ந்து சீரியலில் ஜொலிக்கும் குஷ்பு வெள்ளித்திரையில் ரஜினியின் அண்ணாத்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.

குஷ்புவைக் கிண்டலடித்த ரசிகர்… விட்டு விளாசிய குஷ்பு!!

சினிமா, சீரியல், அரசியல் என கலக்கிவரும் குஷ்பு சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார். சமீபத்தில் ட்விட்டரில்  கொரோனா ஊரடங்கினால் புலம் பெயர் தொழிலாளர்கள் நீண்ட தூர, நடந்து பயணிப்பது, பசியால் வாடுவது குறித்து பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவின் ஒரு கமெண்ட்டில் ஒருவர், “சுசுபு ஆண்டி… இன்னும் விக் தான் வைக்கிறீங்களா? என்று கேட்க, கடுப்பான குஷ்பு, “இந்த முட்டாள் பீசு யாரு? உன்னுடைய முகத்தையும் நிஜப் பெயரையும் தைரியமாக உலகிற்கு காட்ட முடியாத கோழையே “என்று விட்டு விளாசியுள்ளார்.

From around the web