பாலாவின் ஸ்பெஷல் பவரை சுக்குநூறாய் நொறுக்கிய கேபி!

 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் கோழி நரி டாஸ்க் நடைபெற்றபோது அதில் அதிக புள்ளிகள் எடுத்ததால் பாலாவுக்கு ஸ்பெஷல் பவர் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த பவரை பயன்படுத்தும் வாய்ப்பு நேற்றைய ஆட்டத்தின் போது நடந்தது 

நேற்றைய வளையத்தில் பந்துகள் போடும் டாஸ்க்கில் தன்னுடன் யார் மோத வேண்டும் என்பதை பாலா தனது ஸ்பெஷல் பவரை பயன்படுத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று பிக்பாஸ் கூறினார். சோம், ஆரி மற்றும் கேபி ஆகிய மூவரில் ஒருவருடன் மோதலாம் என்ற நிலையில் பாலாஜி, கேபியை தேர்வு செய்தார் 

gabi

ஆனால் கேபி மிக அபாரமாக விளையாடி அந்த சுற்றில் வெற்றி பெற்றதால் பாலாவின் ஸ்பெஷல் பவர் சுக்குநூறாக நொறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கேபி அந்த சுற்றில் மொத்தத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று ஆறு புள்ளிகளை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

பாலாவின் ஸ்பெஷல் பவருக்கு வேறு ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பாக யாரையாவது நாமினேட் செய்யும் பவர் கிடைக்கும் என்றும் அதை வைத்து அவர் ஆரியை நாமினேட் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பார்வையாளர்கள் கணித்தனர்.

ஆனால் பாலாவுக்கு ஒரு மொக்கையான ஸ்பெஷல் பவர் கொடுத்து அந்தப் பவரையும் அவர் வீணாகிக்கியது பாலாவின் ஆர்மியினர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

From around the web