கேபி இப்படி பண்ணிருச்சே: ஆஜித்திடம் புலம்பிய பாலாஜி!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது வீட்டில் எட்டு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் இந்த எட்டு பேர்களில் 4 பேர்கள் வெளியேற்றப்பட உள்ள நிலையில் அந்த நான்கு பேர்கள் யார் என்பதே தற்போதைய கேள்வி கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கேபி, ஷிவானி, ஆஜித் ஆகிய மூவரை வெளியேற்ற பார்வையாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கும்போது வலிய வந்து ஒரு சிலர் மாட்டிக் கொண்டதால் நல்ல போட்டியாளர்களும் வெளியேறி வருகின்றனர் 

balaji

இந்த நிலையில் கேபி குறித்து பாலாஜியும், பாலாஜி குறித்து கேபியும் இன்றைய மூன்றாம் புரமோவில் புலம்பி வருவது குறித்த வீடியோ காட்சிகள் உள்ளன.  அந்த வீடியோ காட்சியில், ‘பாத்ரூமுக்குள் இருக்கும் ரியோவிடம் ’நான் எங்கும் ஓபன் அப் பண்ணி பேசுறதில்லையாம். அப்படி இருந்துதான் நான் கமல் சார்க்கிட்ட சொன்னேனா, ஸ்ட்ரேட்டர்ஜின்னு.  நான் ஓப்பன் அப் பண்ணி பேசியதால் தான் இப்போ என்னை குத்தியிருக்கிறார் என்று கேபி கூறுகிறார். மேலும் அமைதியா இருந்தாலும் பிரச்சனை பேசினாலும் பிரச்சனை என்று கேபி கூறுகிறார். 

அதேநேரத்தில் பாலாஜி, ஆஜித்திடம் கேபி குறித்து கூறியபோது, ‘கேபிக்கிட்ட நான் ஒரு விஷயத்த சொல்லியிருக்கேன். அர்ச்சனாக்கா பண்றது எனக்கு உண்மையா ஃபேக்கான்னு தெரியல, டவுட்டா இருக்குன்னு.  இது ரெண்டு பேருக்குள்ள நடந்த மேட்டர். நம்பி சொன்னதை அர்ச்சனா அக்காக்கிட்ட சொல்லியிருக்கு. யாரு பின்னாடி பேசினது கேபியா நானா? என்று கேட்கிறார். இந்த இருவரின் புலம்பல் காரணமாக இன்று பிரச்சனை வெடிக்க வாய்ப்பு உள்ளது.

From around the web