சோபியா விவகாரம்: குரல் கொடுத்த கோலிவுட் நட்சத்திரங்கள்

கோலிவுட் திரையுலகினர் சினிமா மட்டுமின்றி பல சமூக விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். அரசியல், சமூக அவலம், உள்பட அனைத்திற்கும் குரல் கொடுத்து வரும் தமிழ் திரையுலகினர் இன்று இந்திய அளவில் டிரெண்டில் உள்ள சோபியா விவகாரம் குறித்தும் பலர் தங்கள் சமூக வலைத்தளங்கலில் கருத்து தெரிவித்துள்ளனர். அதுகுறித்து தற்போது பார்ப்போம் கமல்ஹாசன்: பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள்
 

 சோபியா விவகாரம்: குரல் கொடுத்த கோலிவுட் நட்சத்திரங்கள்

கோலிவுட் திரையுலகினர் சினிமா மட்டுமின்றி பல சமூக விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். அரசியல், சமூக அவலம், உள்பட அனைத்திற்கும் குரல் கொடுத்து வரும் தமிழ் திரையுலகினர் இன்று இந்திய அளவில் டிரெண்டில் உள்ள சோபியா விவகாரம் குறித்தும் பலர் தங்கள் சமூக வலைத்தளங்கலில் கருத்து தெரிவித்துள்ளனர். அதுகுறித்து தற்போது பார்ப்போம்

கமல்ஹாசன்: பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்

சோபியா விவகாரம்: குரல் கொடுத்த கோலிவுட் நட்சத்திரங்கள்இயக்குனர் பா,ரஞ்சித்: ஜனநாயகத்தின் குரல் சோபியா: மிழகஅரசே விடுதலைசெய் பாசிச பாஜக ஆட்சி ஓழிக

உதயநிதி ஸ்டாலின்: தனது தந்தை மு.க.ஸ்டாலின் அவர்களின் டுவிட்டை பதிவு செய்து அதன் பின்னர், ‘நானும் சொல்கிறேன் ! “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக! ” #FacsistBJP #பாசிசபாஜகஆட்சிஒழிக என்று கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு: பாஜக பிடியில் இருக்கும் அதிமுக அரசுக்கு காது கேட்காது, பேச வராது என்று தெரிவித்துள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு

நடிகை கஸ்தூரி: சோபியா கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடிகை கஸ்தூரி ட்வீட்டியுள்ளார். அதில் பாசிசம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் ராஜூமுருகன்: கேள்வி கேட்டால் கைது, உண்மை பேசினால் வழக்கு … நம்மிடம் இருப்பது ஒரே ஆயுதம் … ஒன்றுகூடு … #உரக்கப்பேசு #பாசிசபாஜக_ஆட்சிஒழிக

From around the web