சாத்தான்குளம் விவகாரத்திற்காக கொந்தளித்த கோலிவுட்: ரஜினி, அஜித் விஜய், சூர்யா எங்கே?

சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி இந்தியாவே கொந்தளித்துள்ளது. கோலிவுட் திரையுலகின் பல பிரபலங்கள் தங்கள் டுவிட்டரில் இதுகுறித்து ஆவேசமாக கருத்து கூறி வருகின்றனர். இதுகுறித்து தற்போது பார்ப்போம் நடிகர் ஜெயம் ரவி: சட்டத்தைவிட உயர்ந்தவர் எவரும் இல்லை மனிதத் தன்மையற்ற இந்த செயலுக்கு நீதி வேண்டும் மாளவிகா மோகனன்: தூத்துக்குடியில் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோர்களுக்கு என்ன நடந்தது என்பதை கேட்டு திகைத்து, உணர்ச்சியற்று போனேன். காவல்துறையினரின் இந்த
 
சாத்தான்குளம் விவகாரத்திற்காக கொந்தளித்த கோலிவுட்: ரஜினி, அஜித் விஜய், சூர்யா எங்கே?

சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி இந்தியாவே கொந்தளித்துள்ளது. கோலிவுட் திரையுலகின் பல பிரபலங்கள் தங்கள் டுவிட்டரில் இதுகுறித்து ஆவேசமாக கருத்து கூறி வருகின்றனர். இதுகுறித்து தற்போது பார்ப்போம்

நடிகர் ஜெயம் ரவி: சட்டத்தைவிட உயர்ந்தவர்‌ எவரும்‌ இல்லை மனிதத்‌ தன்மையற்ற இந்த செயலுக்கு நீதி வேண்டும்

மாளவிகா மோகனன்: தூத்துக்குடியில் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோர்களுக்கு என்ன நடந்தது என்பதை கேட்டு திகைத்து, உணர்ச்சியற்று போனேன். காவல்துறையினரின் இந்த வகையான மிருகத்தனம் மனிதாபிமானமற்றது

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும்‌ செயலும்‌ , அதிகாரமும்‌ இப்புவியில்‌ யாருக்கும்‌ இல்லை… நீதி வழங்காவிடில்‌ பாதிக்கப்பட்ட சமூகம்‌ அதற்கான நீதியை பெற்றுகொள்ளும்‌ என்பது வரலாறு…

இசையமைப்பாளர் டி.இமான்: ஜெயராஜ்‌, பென்னிக்ஸுக்கு நடந்த கொடூரத்தை அறிந்து பதறிப்‌போனேன்‌; அவர்கள்‌ அனுபவித்த சித்ரவாதையை என்னால்‌ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த இரக்கமற்ற செயலுக்கு எதிராக நாம்‌ அனைவரும்‌ குரல்‌ கொடுக்க வேண்டும். அவர்கள்‌ இருவரும்‌ இந்தியாவின்‌ ஜார்ஜ்‌ ஃப்ளாயிட்கள்‌

இயக்குனர் பா.ரஞ்சித்: இன்னொரு ஜெயராஜ், பென்னிக்ஸை காவல்துறை பயங்கரவாதத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம் கடமையாகும். தனிமனிதஉரிமை & பாதுகாப்பை உறுதிசெய்தல் வேண்டும். எளிய மக்களை பயமின்றி அடித்து நொறுக்கும் ஒவ்வொரு காவலர்களும் குற்றவாளிகளாக்க பட வேண்டும்! விழித்துகொள்வோம்!

நடிகை வரலட்சுமி: சாத்தான்குளம்‌ காவல்துறையினர்‌ நடத்தையை பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்‌; ஜெயராஜ்‌ மற்றும்‌ பென்னிக்ஸ்‌ குடும்பத்திற்கு நீதி வேண்டும்‌. இந்த சம்பவத்தை வைத்து நாம்‌ முழு காவல்‌ துறையையும்‌ குறை கூற முடியாது; ஆனால்‌ அந்த இரண்டு காவல்‌ அதிகாரிகள்‌ தண்டிக்கப்பட வேண்டும்‌

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: சாத்தான்குளம்‌ சம்பவம்‌ பயங்கரமானது, இது உண்மையில்‌ ஏற்றுக்கொள்ள முடியாத மனிதாபிமானமற்ற செயல்‌; அவர்களுக்கு நீதி தாமதமானால்‌ அது அநீதியானது

நடிகை ராஷிகண்ணா: காவல்துறை உடையில்‌ இருந்த இரக்கமற்றவர்களால்‌ இந்த கொடூரம் நடந்துள்ளது. சட்டத்திற்கு மேல்‌ யாரும்‌ இருக்கக்கூடாது; இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள்‌ கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்‌

நடிகர் சாந்தனு: இதை மறைக்க வேறு செய்திகள் இருக்கும் .. உருவாக்கப்படும் … ஆனால் ஒரு முறை உருவாக்கப்பட்ட கருப்பு புள்ளி எப்போதும் கருப்பு புள்ளியாகவே இருக்கும். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

இயக்குனர் சேரன்: காவல்துறை என்றாலே அடித்து சித்ரவதை செய்வதுதான் என்ற எண்ணத்தை உருவாக்கும் சாத்தான்குள போலீஸ் அதிகாரிகள் போன்றோரின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்போலீஸ் அதிகாரிகள் கண்டிப்பு குரல் எழுப்ப வேண்டும்.. இங்கே இறந்த இருவருக்கான நீதி என்பதை தாண்டி இனிஒருவர் இதுபோல உயிரிழக்கக்கூடாது.

நடிகர் பால சரவணன்: அநியாயங்களும் அநீதிகளும் நடந்து கொண்டேதான் இருக்கபோகிறது நாமும் அதை கடந்து போய் கொண்டேதான் இருக்கபோய்கிறோம், எத்தனை பெரிய இழப்பு பென்னிக்ஸ் அவர்களின் தாய்க்கு…ரகுகணேஷ், ஶ்ரீதர்,பாலகிருஷ்ணன் உண்மையில் உங்களது குடும்பத்திற்குதான் இது மிக பெரிய இழப்பு..வெட்கிதலைகுனியுங்கள்..

நடிகை ஹன்சிகா: சாத்தான்குளம்‌ விவகாரம்‌ அறிந்து பதறிப்போனேன்‌; இதில்‌ சம்பந்தப்பட்ட காவலர்கள்‌, காவல்துறையையும்‌, இந்தியாவையும்‌ அவமானம்‌படுத்தும்படியாக நடந்து கொண்டுள்ளார்கள்‌. சட்டத்தின்‌ முன்‌ அனைவரும்‌ சமம்‌; எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ குற்றவாளிகள்‌ தப்பிக்க கூடாது; அவர்கள்‌ தண்டிக்கப்பட வேண்டும்‌ நீதி நிலைநாட்டப்பட வேண்டும்‌

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்: ஜெயராஜ்‌ மற்றும்‌ பென்னிக்ஸூக்கு நடந்த கொடுமையை அறிந்து வேதனை அடைந்‌தேன்‌. அவர்களின்‌ குடும்பத்திற்கு நீதி கிடைக்க நாம்‌ அனைவரும்‌ நிச்சயம்‌குரல்‌ எழுப்ப வேண்டும்‌

நடிகர் கெளதம் கார்த்திக்: சாத்தான்குளம் ஜெயராஜ் & ஃபெனிக்ஸ் மீது இழைக்கப்பட்ட கொடூரத்தைக் கேள்விப்பட்டதில் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். இது நீதி, சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்தும் நல்ல மற்றும் நேர்மையான காவல்துறையினரின் வேலை அல்ல. சீருடையில் இருக்கும் காட்டுமிராண்டித்தனமான குற்றவாளிகளின் வேலை இது!

திரையில் சூப்பர் ஸ்டார்களாகவும், மாஸ் நடிகர்களாகவும் திகழும் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு ஆகியோர்களிடம் இருந்து இதுவரை எந்தவித கருத்துக்களும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web