கோலமாவு கோகிலா: திரைவிமர்சனம்

நடிகை நயன்தாரா கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா நடித்துள்ள இன்னொரு படம் தான் ‘கோலமாவு கோகிலா’. இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம் அன்பான அப்பா, அம்மா, அழகான பாசமான தங்கை, சுமாரான வருமானம் தரும் வேலை என இனிமையான நடுத்தர குடும்பத்து வாழ்க்கை வாழ்ந்து வரும் நயன்தாராவுக்கு திடீரென அம்மாவுக்கு கேன்சர் என்ற வகையில் வில்லன் வருகிறது. அம்மாவை அந்த நோயில் இருந்து காப்பாற்ற
 
coco-review

கோலமாவு கோகிலா: திரைவிமர்சனம்

நடிகை நயன்தாரா கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா நடித்துள்ள இன்னொரு படம் தான் ‘கோலமாவு கோகிலா’. இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

அன்பான அப்பா, அம்மா, அழகான பாசமான தங்கை, சுமாரான வருமானம் தரும் வேலை என இனிமையான நடுத்தர குடும்பத்து வாழ்க்கை வாழ்ந்து வரும் நயன்தாராவுக்கு திடீரென அம்மாவுக்கு கேன்சர் என்ற வகையில் வில்லன் வருகிறது. அம்மாவை அந்த நோயில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் வேண்டும் என டாக்டர் கூற, அதிர்ச்சியில் உறைகிறார் நயன்தாரா. இவ்வளவு பெரிய பணத்திற்கு எங்கே போவது என்று குழப்பத்தில் இருக்கும் நயன்தாராவுக்கு தற்செயலாக கோகைன் பவுடர் விற்கும் கும்பலுடன் தொடர்பு ஏற்படுகிறது. அம்மாவின் உயிரை காப்பாற்ற கோகைன் பவுடர் கடத்த தொடங்கும் நயன்தாராவுக்கு திடீரென ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கலால் தனது அப்பா, அம்மா, தங்கை உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையில் அந்த சிக்கலில் இருந்து தனது குடும்பத்தை நயன்தாரா எப்படி காப்பாற்றினார் என்பதுதான் மீதிக்கதை

கோலமாவு கோகிலா: திரைவிமர்சனம்நயன்தாரா இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடம். ஆரம்பத்தில் கடைசி வரை முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு வில்லன் ஆட்கள் முதல் போலீஸ் அதிகாரி வரை அனனவரின் கண்களிலும் விரலை ஆட்டும் நயன்தாராவின் நடிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மிகப்பெரிய அனுபவம், மெச்சூரிட்டி இல்லாதவர்களால் இந்த கேரக்டரில் நடிக்க முடியாது. நயன்தாரா, கிடைத்த வாய்ப்பை மிக அருமையாக பயன்படுத்தியுள்ளார்

நயன்தாராவுக்கு இணையான நடிப்பு யோகிபாபுவுக்கு. நயன்தாராவை ஒன்சைடாக காதலித்து, பின்னர் ஏன் காதலித்தோம் என்று புலம்பும் நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டி பறக்கின்றார் யோகிபாபு

கோலமாவு கோகிலா: திரைவிமர்சனம்விஜய்டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன் இருவரும் காமெடியில் கலக்கியுள்ளனர். நயன்தாராவுடன் படம் முழுவதும் கேரக்டர் என்பதே இவர்களுடைய கேரக்டருக்கு கிடைத்த மிகப்பெரிய சிறப்பு

ஆர்.எஸ்.சிவாஜி, மொட்டை ராஜேந்திரன், சரவணன், அன்புதாசன் , டோனி கேரக்டரில் நடித்திருக்கும் இளைஞர் என அனைத்து கேரக்டர்களும் ஆடியன்ஸ்களை சிரிக்க வைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.

அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் கனகச்சிதம்

இயக்குனர் நெல்சன் ஆரம்பம் முதல் முடிவு வரை காமெடி திரைக்கதையை பிசிறுதட்டாமல் எந்தவித குழப்பங்களும் இல்லாமல் கொண்டு சென்றுள்ளார். அவருக்கு நமது வாழ்த்துக்கள். குறிப்பாக பத்து நிமிட வேன் காட்சியில் ஆடியன்ஸ்கள் குலுங்கி குலுங்கி சிரிப்பதை காண முடிந்தது. இதுவொரு முழுக்க முழுக்க காமெடி படம் என்பதால் லாஜிக்கை சுத்தமாக மறந்து இந்த படத்தை பார்த்தால் இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம் என்பது புரியும். மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று இரண்டரை மணி நேரம் சிரித்துவிட்டு வரவிரும்புவர்கள் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்

3.75/5

From around the web