’வலிமை’யை முடிச்சாச்சு, அடுத்தது என்ன? 

 

தல அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இடையில் தீபாவளி விடுமுறை கூட இல்லாமல் படக்குழுவினர் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் என்பதும் தீபாவளிக்கு வீட்டுக்கு கூட போகாமல் இந்த படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கும் காலா நடிகை ஹூமா குரோஷி தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

அவர் ஹைதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் தன்னுடைய சொந்த ஊருக்கு விமானத்தில் செல்ல வரும் போது ரசிகர்கள் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

valimai

’வலிமை’ படத்தை முடித்த பின் அவர் இன்னொரு முக்கிய பிரபல நடிகரின் தமிழ் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதனை அடுத்து விரைவில் இது குறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ’வலிமை’திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பிரேக்கை ஏற்படுத்தும் என்று கூறப்படுவதால் அவருக்கு இந்த ஆண்டு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் அஜீத் தனது பகுதியின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடித்து விடுவார் என்றும் வரும் ஜனவரி முதல் அவர் அடுத்த படத்திற்கான பணிகளை இறங்குவார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

From around the web