கொலையாளி வனிதாதான்… ஒரு வழியாக அறிவித்த பிக் பாஸ்

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க்கை இரண்டு நாட்களாக அனைவரும் செய்து வந்தனர். அதன்படி, பிக்பாஸ் வீட்டில் கொடூர கொலையாளிகள் நுழைந்து ஒவ்வொரு போட்டியாளர்கள் கொல்வார்கள் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் வழங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றுடன் கொலையாளி டாஸ்க் நடந்து
 

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க்கை இரண்டு நாட்களாக அனைவரும் செய்து வந்தனர். அதன்படி, பிக்பாஸ் வீட்டில் கொடூர கொலையாளிகள் நுழைந்து ஒவ்வொரு போட்டியாளர்கள் கொல்வார்கள் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் வழங்கினார். 

கொலையாளி வனிதாதான்… ஒரு வழியாக அறிவித்த பிக் பாஸ்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றுடன் கொலையாளி டாஸ்க் நடந்து முடிந்தது. முதலில் இந்த டாஸ் ஆரம்பித்தவுடன் கவின் மற்றும் மீராவை இந்த கொலையாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ்காரர்களாக செயல்பட்டனர். ஆனால் அவர்கள் அதில் மும்முரமாக செயல்படவில்லை.

கடைசியாக வனிதா மற்றும் முகின் புத்திசாலித்தனத்தால் கவினும் கொலை செய்யப்பட்டார். டாஸ்க் பல சச்சரவுக்கு இடையே முடிவடைந்தது, யார் கொலையாளி என்பதை வனிதாவே ஒப்புக்கொண்டார். அதன் பின் வீட்டில் இருந்தவர்களுக்கு எப்படி கொலைகள் நடந்தது என்பது டிவியில் குறும்படம் போல் காண்பிக்கப்பட்டது. 

ஒரு வழியாக டாஸ்க் முடியும் வரை கலகலப்பாகவே சென்றது குறிப்பிடத்தக்கது.

From around the web