கிட்னி செயலிழப்பு: பிரபல நடிகை திடீர் மரணம் 

 

கிட்னி செயல் இழந்ததால் பிரபல நடிகை திடீரென மரணம் அடைந்து உள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 

பல பெங்காலி, இந்தி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மிஸ்டி முகர்ஜி. இவருக்கு கடந்த சில நாட்களாக கிட்னி கோளாறு இருந்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் அவருடைய கிட்னியை செயல்படுத்துவதற்கான அனைத்து சிகிச்சைகளும் செய்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது 

இதனை அடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நேற்று இறுதி சடங்கு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் என கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள பல மொழித் திரைப்படங்களில் நடித்த நடிகை மிஸ்டி முகர்ஜியின் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web