பிரபு வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த குஷ்பு: வைரல் புகைப்படங்கள்!

 

நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு ஆகிய இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள் என்பதும், இருவருக்கும் காதல், திருமணம் என்ற கிசுகிசு கூட கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கிளம்பியது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தற்போது தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்று அவர் திடீரென சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்திற்கு சென்றார் 
அங்கு சமீபத்தில் பாஜகவில் இணைந்த ராம்குமார் கணேசனிடம் வாழ்த்து பெற்ற குஷ்பு, பிரபு மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது குறித்த புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

kushboo

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் அன்னை இல்லத்துக்கு சென்று அனைவரையும் சந்தித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக சமீபத்தில் கட்சியில் இணைந்த ராம்குமார் கணேசனிடம் வாழ்த்து பெற்றேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.


 

From around the web