தளபதி 65 விஜய்க்கு வில்லனாகும் கே.ஜி.எப் பட வில்லன்... அப்படி போடு!
தளபதி விஜய்க்கு வில்லனாக கே.ஜி.எப் பட வில்லன் ராமச்சந்திர ராஜு நடிக்கவுள்ளார்.
Wed, 10 Feb 2021

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 65.
சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடிகை பூஜா ஹேக்டே நடிக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய்க்கு வில்லனாக இப்படத்தின் கே.ஜி.எப் பட வில்லன் ராமச்சந்திர ராஜு நடிக்கவுள்ளார் என தெரிவிக்கின்றனர். ஆனால் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.