அதிரடியாக நிறுத்தப்பட்ட கீர்த்தி சுரேஷ் பட சூட்டிங்!!!

படப்பிடிப்பில் கொரோனா பரவியதால்  அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர்.
 
அதிரடியாக நிறுத்தப்பட்ட கீர்த்தி சுரேஷ் பட சூட்டிங்!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார், இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

 அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து செல்வராகவனுடன் இவர் சாணி காயிதம் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு இவர் ஜோடியாக நடித்து வந்த திரைப்படம் தான் சர்காரு வாரி பாட்டா. இப்படத்தின் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 மேலும் இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர். படப்பிடிப்பில் கொரோனா பரவியது ’சர்காரு வாரி பாட்டா’ படக்குழுவினருக்கு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

From around the web