’வலிமை’ நாயகி கீர்த்திசுரேஷா? புதிய தகவல்!

’தல’ அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரும் இன்னும் இந்த படத்தின் நாயகி முடிவு செய்யப்படாமல் உள்ளது இந்த நிலையில் அஜீத் ஜோடியாக இந்த படத்தில் நடிக்க யாமி கவுதம், ஹூமா குரேஷி, இலியானா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய நால்வர் பரிசீலனையில் இருப்பதாகவும் இதில் கீர்த்தி சுரேஷுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தலைவர் 168’ படத்தில்
 
’வலிமை’ நாயகி கீர்த்திசுரேஷா? புதிய தகவல்!

’தல’ அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரும் இன்னும் இந்த படத்தின் நாயகி முடிவு செய்யப்படாமல் உள்ளது

இந்த நிலையில் அஜீத் ஜோடியாக இந்த படத்தில் நடிக்க யாமி கவுதம், ஹூமா குரேஷி, இலியானா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய நால்வர் பரிசீலனையில் இருப்பதாகவும் இதில் கீர்த்தி சுரேஷுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தலைவர் 168’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால்தான் கீர்த்தி சுரேஷ் ஹிந்திப் படத்தை கைவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அஜித்தின் ’வலிமை’ படத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் தான் அவர் இந்தி படத்தில் இருந்து விலகி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும், இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் வாரம் சென்னையில் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது

From around the web