கீர்த்திசுரேஷின் ஃபேவரேட் எப்பவும் ‘தல’ தான்: வைரலாகும் டுவீட்!

 

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே அண்ணாத்த உள்பட மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று அவர் நடித்த ’மிஸ் இந்தியா’ என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பதும் இந்த திரைப்படம் ரசிகர்களாலும் ஊடகங்களாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் இன்று தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் உரையாடி வருகிறார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் சுவராசியமாக பதில் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஒரு ரசிகர் கீர்த்தி சுரேஷிடம் ’உங்களது ஃபேவரேட் கிரிக்கெட் பிளேயர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் ’தம்பி எப்பவும் நம்ம ஃபேவரேட் ஏழாம் நம்பர் தான் என்று குறிப்பிட்டுள்ளார் 

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஏழாம் நம்பர் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை குறிக்கும் என்பதால் அவர் குறிப்பிட்டது தல தோனியை தான் என்பதை அறிந்த தோனியின் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ்க்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்

From around the web