குத்த வச்சு உட்கார்ந்த செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ்: உதவி செய்த தனுஷ்

 

இதுவரை பிரபல இயக்குனராக ரசிகர்கள் பார்த்து வந்த செல்வராகவனை முதன்முதலாக அவர் ஒரு முக்கிய வேடத்தில் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது 

‘சாணிக் காகிதம் என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்த நிலையில் இன்று நடிகர் தனுஷ் தனது சகோதரர் செல்வராகவனின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 


குத்தவைத்து உட்கார்ந்த படி இருக்கும் செல்வராகவனும் இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷூம் உள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் உட்கார்ந்து இருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்று 

பல நடிகர்களை மிகச் சிறப்பாக நடிக்க வைத்த செல்வராகவன் முதன்முதலாக ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் அவரது நடிப்பு எப்படி இருக்கும் என்பதை பார்க்க மிகுந்த ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web