இந்திய அளவில் டிரெண்ட் ஆன கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய கதாநாயகிகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் மட்டுமே இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
Thu, 4 Feb 2021

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இளம் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் மிகவும் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகவும் தேசிய விருதை வென்ற நடிகையாகவும் மாறியவர் இவர்.
ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்தில் பிரபல Forbes நிறுவனம் வெளியிடும், அந்த வகையில் இந்த ஆண்டில் இந்தியளவில் மிகவும் பிரபலமான 30 வயதுக்குள் இருக்கும் பிரபலங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
இதில் தென்னிந்திய கதாநாயகிகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் மட்டுமே இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த தரவரிசை பட்டியல் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.