தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை முதன் முறையாக பதிவிட்ட கயல் ஆனந்தி!
கயல் தனது கணவருடன் திருமணத்திற்கு பிறகு எடுத்து கொண்ட முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது
Mon, 11 Jan 2021

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கயல், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் கயல் அனந்தி.
இவர் பொறியாளன் என்ற திரைப்படத்தின் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், கயல் திரைப்படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
மேலும் கடைசியாக தமிழில் இவர் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் Socrates என்பவரை திருமணம் செய்து கொண்டார் கயல் அனந்தி. மேலும் தற்போது அவர் தனது கணவருடன் திருமணத்திற்கு பிறகு எடுத்து கொண்ட முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.