பிப்ரவரி 19ல் வெளியாகிறது கயல் ஆனந்தி நடித்துள்ள படம்...!

பிப்ரவரி 19ம் தேதியில் நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ள "கமலி ஃப்ரம் நடுக்காவேரி"என்ற திரைப்படம் வெளியாகிறது...,
 
நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்....,

சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஆனந்தி.இவரது நடிப்பில் வெளியாகிய "கயல்" திரைப்படத்தின் மூலம் இவர் " கயல் ஆனந்தி "என்று ரசிகர்களிடம் அழைக்கப்பட்டார். இவர் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன்"பொறியாளன்" என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

Anandhi

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய "விசாரணை" திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். மேலும் இவர் "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு "என்ற திரைப்படத்திலும்  நடித்திருந்தார்.

தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ளபடம் "கமலி ஃப்ரம் நடுக்காவேரி".இத்திரைப்படத்தினை இயக்குனர் ராஜசேகர் துரைராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இந்த மாதம் 19ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதியானது அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.தற்போது நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தினை குறித்த கருத்தினை ட்விட் செய்துள்ளார்.

From around the web