’என்னை அறிந்தால்’ அருண்விஜய் போல் மாறிய கவின்!

 

நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான கவின், கடந்த சில மாதங்களாக தாடியுடன் அடர்த்தியான முடியுடன் காணப்பட்ட நிலையில் தற்போது திடீரென வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மாற்றம் செய்து டிரிம் தாடியுடன் உருமாறி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

இந்த புதிய கெட்டப்பை பார்த்து கவின் ஆர்மியினர் பலரும் ’என்னை அறிந்தால்’ அருண்விஜய் போல் இருப்பதாகவும் இது எந்த படத்துக்கான கெட்டப் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். சுப்ரமணியபுரம் ஜெய் போலிருந்த கவின், திடீரென என்னை அறிந்தால் அருண்விஜய் போல் மாறி விட்டதற்கு என்ன காரணம் என்றும் சிலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர் 

இந்த நிலையில் கவினின் இந்த புதிய கெட்டப், சிவகார்த்திகேயன் அடுத்து வரும் டாக்டர் படத்துக்கான கெட்டப் என்றும் அந்த படத்தில் கவின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்றும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர் 

தற்போது ’லிப்ட்’ என்ற படத்தில் ஐடி ஊழியராக கவின் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் அமிர்தா ஐயர் கவினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் காயத்ரி ரெட்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் திரை அரங்குகள் திறந்த உடன் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

From around the web