சோகத்தில் கவின் ரசிகர்கள்...அட என்னப்பா இப்படி ஆகிடுச்சு

தளபதி 65 படத்தில் கவின் உதவி இயக்குனராக தான் பணியாற்ற இருக்கிறார்.
 
சோகத்தில் கவின் ரசிகர்கள்...அட என்னப்பா இப்படி ஆகிடுச்சு

பிக்பாஸ் 3வது சீசனில் அனைவராலும் முக்கியமாக கவனிக்கப்பட்டவர் கவின். சரவணன்-மீனாட்சி என்கிற ஹிட் சீரியல் மூலம் எல்லோர் மனதையும் கவர்ந்தார்.

கவின் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு பல சர்ச்சைகளில் சிக்கினார். அந்த பிரச்சனைகள் முடிய மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு விஷயத்தில் மாட்டிக் கொண்டே இருந்தார்.

இப்போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் வேறொரு நபராக வலம் வருகிறார்.

அண்மையில் அதாவது நேற்று (மார்ச் 31) விஜய்யின் 65வது படத்தின் பூஜை போடப்பட்டது. பின் குழுவினர் அனைவரும் நின்று புகைப்படம் எல்லாம் எடுத்தார்கள். அதில் ரசிகர்கள் கவினை கண்டுபிடிக்க தளபதி 65ல் நடிக்கிறார் என்றனர். ஆனால் இப்போது வரும் தகவல் என்னவென்றால் இயக்குனர் நெல்சன் திலீப்பிற்கு கவின் நல்ல நண்பராம்.

இந்த தளபதி 65 படத்தில் கவின் நடிக்கவில்லையாம், அதற்கு மாறாக உதவி இயக்குனராக தான் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார் என்று தகவல் வருகின்றன.

விஜய் படத்தில் கவின் நடிக்கிறார் என்று சந்தோஷத்தில் இருந்த ரசிகர்களுக்கு இது வருத்தமான செய்தியாக அமைந்துவிட்டது.

From around the web