பிக்பாஸ் பிரபலத்தின் படத்தில் சிவகார்த்திகேயன்!!!

கவின் நடித்துள்ள லிப்ட் எனும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
 
பிக்பாஸ் பிரபலத்தின் படத்தில் சிவகார்த்திகேயன்!!!

தமிழ் திரையுலகில் தற்போது ரஜினி, கமல், அஜித், விஜய் வரிசையில் இடம்பிடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் தற்போது டாக்டர் எனும் திரைப்படம் உருவாகி வெளியாக காத்துருக்கிறது. மேலும் அயலான், டான் எனும் இரு படங்கள் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் தற்போது நம்பர் 1 நிகழ்ச்சியாக விளங்கி வருவது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ்.

இதிலிருந்து பல பிரபலங்கள் தற்போது தமிழ் திரையுலகில் படங்கள் நடித்து வருகின்றனர். அதில் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமாகி திரைப்படங்கள் நடித்து வருபவர் நடிகர் கவின்.

இந்நிலையில் கவின் நடித்துள்ள லிப்ட் எனும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இருவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சப்ரைசாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web