தியேட்டர் அனுமதிக்கு நன்றி சொன்ன குஷ்பு... கஸ்தூரி போட்ட டிவீட்!.. அட இது புதுசா இருக்கே!

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளித்த முதல்வர் அவர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு பலர் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் தியேட்டர்கள் குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளித்த முதல்வர் அவர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு நன்றி. பாதுகாப்பை நினைத்து கவலைப்படுவோருக்கு, சில கேஸ்களை தவிர எந்த சினிமா செட்டிலும் பரவல் அதிகம் இல்லை. 

நாங்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறோம். தியேட்டர்களிலும் அதையே செய்வார்கள். தியேட்டர்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம்.

100 சதவீத இருக்கைகளை பயன்படுத்துவது குறித்து மாற்று கருத்து உள்ளவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பயமாக இருந்தால் தயவு செய்து செல்லாதீர்கள். உங்களின் பயம் புரிகிறது. தியேட்டருக்கு வருமாறு உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

குஷ்புவின் ட்வீட்டை பார்த்த கஸ்தூரி கூறியிருப்பதாவது, நான் என்னை நினைத்து அல்ல சக மக்களை நினைத்து தான் கவலைப்படுகிறேன். வெளியே வருபவர்களால் வீட்டில் இருப்பவர்களின் நலனும் பாதிக்கப்படும். 5 ஸ்டார் ஹோட்டல்களே ஹாட்ஸ்பாட்டுகள் ஆகியுள்ளன. அப்படி என்றால் கூட்டம் நிரம்பும் சினிமா? என்று தெரிவித்துள்ளார்.

From around the web