தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமியை சந்தித்த கஸ்தூரி!

வனிதா விவகாரத்தில் பரபரப்புடன் பேசப்பட்ட நடிகை கஸ்தூரி தற்போது நடிகை விஜயலட்சுமி விவகாரத்திலும் நுழைந்துள்ளார் நேற்று நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாகவும் தனது மரணத்துக்குப் பின்னர் சீமான் அவர்களை சும்மா விடக்கூடாது என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் ஆனால் அவரை மருத்துவமனையில் சேர்த்த அவரது உறவினர்கள் காப்பாற்றி விட்டனர். தற்போது சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் நேற்று இரவே நடிகை விஜயலட்சுமியை
 

தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமியை சந்தித்த கஸ்தூரி!

வனிதா விவகாரத்தில் பரபரப்புடன் பேசப்பட்ட நடிகை கஸ்தூரி தற்போது நடிகை விஜயலட்சுமி விவகாரத்திலும் நுழைந்துள்ளார்

நேற்று நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாகவும் தனது மரணத்துக்குப் பின்னர் சீமான் அவர்களை சும்மா விடக்கூடாது என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்

ஆனால் அவரை மருத்துவமனையில் சேர்த்த அவரது உறவினர்கள் காப்பாற்றி விட்டனர். தற்போது சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் நேற்று இரவே நடிகை விஜயலட்சுமியை சந்திக்க நடிகை கஸ்தூரி முயன்றதாகவும் ஆனால் முடியவில்லை என்றும் இன்று காலை அவரது குடும்பத்தினரை நடிகை கஸ்தூரி சந்தித்ததாகவும் தெரிகிறது

விஜயலட்சுமியின் தாயார் மற்றும் சகோதரி உஷா ஆகியோர்களிடம் பேசியதாகவும் குறிப்பாக விஜயலட்சுமியின் சகோதரி உஷாவை தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவருடன் பணிபுரிந்ததாகவும் கஸ்தூரி தெரிவித்துள்ளார்

தற்போது மூவரும் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர்களுக்கு உடனடியாக தேவை மன நிம்மதி என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நடிகை கஸ்தூரி நுழைஅந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web