மீண்டும் களத்தில் குதிக்கும் தனுஷ் அப்பா

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் அப்பா கஸ்தூரி ராஜா ஒரு பிரபல இயக்குனர் என்பதும் அவர் பல கிராமத்து படங்களை இயக்கிய வெற்றிகரமான இயக்குனர் என்பதும் தெரிந்ததே. மகன்கள் இருவரும் திரையுலகில் புகழ்பெற்றுவிட்டதால திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்த இயக்குனர் கஸ்தூரிராஜா தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார். அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் ‘பாண்டிமுனி’. கஸ்தூரிராஜா இயக்கும் முதல் திகில் படமான இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கிஷெராப் நடிக்கவுள்ளார். மேலும் இந்த
 

மீண்டும் களத்தில் குதிக்கும் தனுஷ் அப்பாநடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் அப்பா கஸ்தூரி ராஜா ஒரு பிரபல இயக்குனர் என்பதும் அவர் பல கிராமத்து படங்களை இயக்கிய வெற்றிகரமான இயக்குனர் என்பதும் தெரிந்ததே.

மகன்கள் இருவரும் திரையுலகில் புகழ்பெற்றுவிட்டதால திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்த இயக்குனர் கஸ்தூரிராஜா தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார்.

மீண்டும் களத்தில் குதிக்கும் தனுஷ் அப்பாஅவர் இயக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் ‘பாண்டிமுனி’. கஸ்தூரிராஜா இயக்கும் முதல் திகில் படமான இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கிஷெராப் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல், பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படம் குறித்து கஸ்தூரிராஜா கூறியதாவது: இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இரு வரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது. சாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும். இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி. படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

From around the web