பெண்களின் தரத்தை குறைக்கும் விதமாக இந்த வருட பிக் பாஸ் அமைந்துவிட்டது- கஸ்தூரி

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நெல்லைக்கு செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்திறங்கிய கஸ்தூரி பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் அதில் அவர் கூறி இருப்பதவாது பெண்களை பாதுகாக்க பட்ஜெட்டில் அதிகம் நிதி ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார். பெண் பிள்ளைகளைக் கடைகளுக்குக்கூட அனுப்ப முடியாத சூழ்நிலை கூட உள்ளது. சாப்பாடு வேண்டுமென்றால்கூட தமிழகத்தில் ஹிந்தியில்தான் கேட்க வேண்டும் என்ற நிலைமைக்கு தமிழகம் மாறிவிட்டது என கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறுகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது, சமூகப்
 

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நெல்லைக்கு செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்திறங்கிய கஸ்தூரி பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்

பெண்களின் தரத்தை குறைக்கும் விதமாக இந்த வருட பிக் பாஸ் அமைந்துவிட்டது- கஸ்தூரி

அதில் அவர் கூறி இருப்பதவாது பெண்களை பாதுகாக்க பட்ஜெட்டில் அதிகம் நிதி ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பெண் பிள்ளைகளைக் கடைகளுக்குக்கூட அனுப்ப முடியாத சூழ்நிலை கூட உள்ளது. சாப்பாடு வேண்டுமென்றால்கூட தமிழகத்தில் ஹிந்தியில்தான் கேட்க வேண்டும் என்ற நிலைமைக்கு தமிழகம் மாறிவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறுகையில்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது, சமூகப் பொறுப்புணர்வோடு கூடிய நிகழ்ச்சி அல்ல. அதில் பங்கேற்ற அனைவருமே சினிமா, நாடகக் கலைஞர்கள், மட்டும்தான் பங்கேற்றுள்ளனர்.

டி.வி நிகழ்ச்சி என்பது பொறுப்புள்ள பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மக்களை ஒரு சிறிய வட்டத்திற்குள்ளாகவே சிக்க வைப்பதாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகளின் போக்கு இருக்கிறது.

தவறான விஷயங்களைச் சொல்வதனாலேயே இங்கு பிரபலம் ஆகிறது என்று கலைஞர்கள் நினைத்தால், அது உண்மையில் தவறான ஒன்றாகும். இனி வரும் நிகழ்ச்சிகள் பொழுதுபோக்குடன் சேர்ந்து பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.எனவும் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இவரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

From around the web