விஜய் , அஜீத் ரசிகர்களின் சண்டை- விஜய் , அஜீத் தீர்வு காண கஸ்தூரி வலியுறுத்தல்

இன்று சமூக வலைதளங்களில் அதிகம் சண்டையிட்டுக்கொள்ளும் ரசிகர்களில் அஜீத், விஜய் ரசிகர்கள் முதலிடத்தில் உள்ளனர்.அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர் , சிவாஜி, ரஜினி, கமல், என காலத்துக்கேற்றவாறு அவரவர்களின் ரசிகர்கள் சண்டையிட்டு வந்துள்ளனர். அதில் ஆரோக்கியமான விவாதங்கள் அதிகம் இருந்துள்ளன. இருவரும் விரோதியாகும் அளவுக்கு மோசமான வார்த்தைகளை கொண்டு சண்டையிட்டதில்லை. ஆனால் விஜய்யின் ரசிகர்களும், அஜீத்தின் ரசிகர்களும் பயங்கரமாக சண்டையிட்டு கொள்வது அன்றாட நிகழ்வுகளாக உள்ளது. அதிலும் மட்டமான வார்த்தைகள், காதில் கேட்க கூசும் கெட்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியும்
 

இன்று சமூக வலைதளங்களில் அதிகம் சண்டையிட்டுக்கொள்ளும் ரசிகர்களில் அஜீத், விஜய் ரசிகர்கள் முதலிடத்தில் உள்ளனர்.அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர் , சிவாஜி, ரஜினி, கமல், என காலத்துக்கேற்றவாறு அவரவர்களின் ரசிகர்கள் சண்டையிட்டு வந்துள்ளனர். அதில் ஆரோக்கியமான விவாதங்கள் அதிகம் இருந்துள்ளன.

விஜய் , அஜீத் ரசிகர்களின் சண்டை- விஜய் , அஜீத்  தீர்வு காண கஸ்தூரி வலியுறுத்தல்

இருவரும் விரோதியாகும் அளவுக்கு மோசமான வார்த்தைகளை கொண்டு சண்டையிட்டதில்லை. ஆனால் விஜய்யின் ரசிகர்களும், அஜீத்தின் ரசிகர்களும் பயங்கரமாக சண்டையிட்டு கொள்வது அன்றாட நிகழ்வுகளாக உள்ளது.

அதிலும் மட்டமான வார்த்தைகள், காதில் கேட்க கூசும் கெட்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியும் மோசமான பெயர்களை வைத்தும் இருவரது ரசிகர்களும் தினமும் சண்டையிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் இவர்களது செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் நடிகை கஸ்தூரி,

அஜீத் பெயரிலும், விஜய் பெயரிலும் இருவரது ரசிகர்களும் மோசமாக ட்ரெண்ட் செய்யப்பட்ட இரண்டு ஹேஷ் டேக்குகளை சுட்டிக்காட்டி கஸ்தூரி கூறியதாவது.

இது எதிர்மறை விளைவுகளையே அதிகம் ஏற்படுத்துகிறது. தவறான சிந்தனைகளை காண்பிக்கிறது. இரு நடிகர்களும் தங்கள் ரசிகர்களை கூட்டாக ஒருங்கிணைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web