கார்த்தியின் ‘சுல்தான்’ சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்!

 

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாகும் என செய்திகள் வெளியான நிலையில் இன்று சென்சார் சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்

‘சுல்தான்’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் இதனை அடுத்து இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி உறுதியாக வெளியாகும் என்றும் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார் 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி உறுதியாக ரிலீஸாகும் என அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு சற்று நிம்மதியை தருகிறது. 
மேலும் எந்த நேரமும் திரையரங்குகள் மூடப்படலாம் என்ற அபாயம் இருப்பதால் இந்த படத்தை ரிலீஸ் செய்வது இது தான் சரியான தருணம் என்று தயாரிப்பு தரப்பு கருதுகிறது 

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஏப்ரல் 2ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web