ஒருவழியாக முடிவுக்கு வந்தது கார்த்தியின் ‘சுல்தான்’

 

கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் சுல்தான் 

இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்பே நிறுத்தப்பட்டதாகவும், இந்த படம் தொடருமா என்பதே சந்தேகம் என்றும் பல்வேறு வதந்திகள் வெளிவந்தன 

ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாகவும் கொரோனா ஊரடங்கு காலத்திலேயே எடிட்டிங் பணிகள் நடந்து வந்ததாகவும், இந்த படம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இந்த நிலையில் சற்று முன் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் சுல்தான் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தை முடித்துக் கொடுக்க ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் மூன்று வருடங்களுக்கு முன் நான் கேட்ட இந்த படத்தின் கதையும் இப்போதும் ஆச்சரியப்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் முடிவடைந்து இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன கார்த்தி ஜோடியாக இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web