கார்த்தியின் சுல்தான் என்ன சொல்கிறார்... ரசிகர்களின் கருத்து!..

கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தை பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 
கார்த்தியின் சுல்தான் என்ன சொல்கிறார்... ரசிகர்களின் கருத்து!..

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள சுல்தான் படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்ட பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் முதல் படம் சுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுல்தான் பற்றி ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

விவசாயம் பற்றிய கதை தான் சுல்தான். ஆனால் கதையை சொன்ன விதம் வித்தியாசமாக இருக்கிறது. இது ஒன் மேன் ஷோ. படத்தை கார்த்தி தன் தோள்களில் தாங்குகிறார். முதல் பாதி அருமை, 2வது பாதி நன்றாக இருக்கிறது. ரஷ்மிகா வரும் காட்சிகள் க்யூட். ஆனால் அவருக்கு முக்கியத்துவம் இல்லை.

அருமையான படம். பிஜிஎம் வேற லெவல். கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் பாதி இன்டர்வல் சண்டை காட்சி தீயாக இருக்கிறது.


 

From around the web