எல்லாத்திலேயும் கலக்குறாருப்பா... சந்தோஷ் நாராயணனை புகழ்ந்த கார்த்திக்

`

சந்தோஷ் நாராயணன் தனக்கு பிடித்தமான ஒரு தப்பாட்ட வாத்தியக்குழுவுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

 
எல்லாத்திலேயும் கலக்குறாருப்பா... சந்தோஷ் நாராயணனை புகழ்ந்த கார்த்திக்

விக்ரமுடன் இணைந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் சியான்60 திரைப்படத்துக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விக்ரம் - துருவ் விக்ரம் நடிக்கும் சியான் 60 படத்தை இயக்கி வருகிறார். அண்மையில் தான் இந்த படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார் கார்த்திக் சுப்புராஜ்.

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, மெர்க்குரி மற்றும் ஜகமே தந்திரம் படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த 7வது திரைப்படமான சியான்60 படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் இசை பணிகளின் போது, சந்தோஷ் நாராயணன் தனக்கு பிடித்தமான ஒரு தப்பாட்ட வாத்தியக்குழுவுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை சந்தோஷ் பகிர்ந்துள்ளார். இதனை பகிர்ந்துள்ள கார்த்திக் சுப்புராஜ், “ஆஹா.. பின்றீங்களே” என குறிப்பிட்டுள்ளார்.


 

From around the web