கீர்த்தி சுரேஷ் தவிர வேறு யாருக்குமே தெரியாது: கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்த ரகசியம்

கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படம் வரும் 19ஆம் தேதி ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பது தெரிந்ததே குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வரும் மாஸ்க் அணிந்த நபர் யார் என்பது குறித்த விவாதங்கள் ரசிகர்களிடையே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தில் நடித்துள்ள மாஸ்க் அணிந்த வில்லன்
 
கீர்த்தி சுரேஷ் தவிர வேறு யாருக்குமே தெரியாது: கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்த ரகசியம்

கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படம் வரும் 19ஆம் தேதி ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பது தெரிந்ததே

குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வரும் மாஸ்க் அணிந்த நபர் யார் என்பது குறித்த விவாதங்கள் ரசிகர்களிடையே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தில் நடித்துள்ள மாஸ்க் அணிந்த வில்லன் நடிகர் யார் என்பதை இயக்குனர் குழுவினர் மற்றும் கீர்த்தி சுரேஷ் தவிர வேறு யாருக்குமே தெரியாது என்றும் அந்த மாஸ்க் மனிதன் யார் என்பதை கிளைமாக்சில் நீங்கள் திரையில் பார்க்கும்போது நிச்சயம் ஆச்சரியம் அடைவீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்

அனேகமாக அந்த மாஸ்க் மனிதன் கார்த்திக் சுப்பராஜின் ஒருசில படங்களில் ஏற்கனவே நடித்த பிரபலமாக இருக்கலாம் ன்று கருதப்படுகிறது’ அந்த பிரபலம் யார் என்பதை வரும் 19ம் தேதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவும், அனில் கிரிஷ் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web