அண்ணன் பற்றி தம்பி கூறினார்...., ரசிகர்கள் சந்தோஷம்!

நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யாவை பற்றி கூறிய கருத்து....,
 
நடிகர் கார்த்தியின் உருக்கமான ட்விட்டர் பக்கம்....!

"நேருக்கு நேர்" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் நீங்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் "நடிகர் சூர்யா". இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியாகி வெற்றியடைந்த படம் "சூரரைப்போற்று". படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவில்லை அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்று மக்களிடையே பாராட்டுப் பெற்றார் நடிகர் சூர்யா.மேலும் இவர் "காக்க காக்க", "ஜில்லுனு ஒரு காதல்" போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா.

surya and karthi

மேலும் இவரது நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்று மக்களிடையே பாராட்டு பெற்றது "சிங்கம்"  திரைப்படம். இத்திரைப்படத்தில் அவரின் நடிப்பும்,கம்பீரமும் ரசிகர்களை வெகுவாக தன் பக்கம் ஈர்த்தது. மேலும் இவர் நடித்த "ஏழாம் அறிவு" என்ற திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது."நடிகர் சூர்யா", "தளபதி" என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் உடன் "நேருக்கு நேர்", "பிரண்ட்ஸ்" என்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா கொரோனா நோயால் பாதிக்கப்பட்டார் என்று செய்தியை அறிவித்து அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார்.இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். தற்போது அவரது தம்பியும் நடிகருமான கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அண்ணனின் குறித்து மகிழ்ச்சி அளிக்கும் செய்தியினை கூறியுள்ளார்.

"அண்ணா வீடு திரும்பியுள்ளார், அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்! சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும். பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு போதுமான நன்றி சொல்ல முடியாது!"
இவ்வாறு நடிகர் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அண்ணனை குறித்த தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பத்தையும் ஆறுதலையும் அளித்துள்ளார்.

From around the web