சூர்யாவின் அடுத்த படத்தில் கார்த்தி: ஆச்சரிய தகவல்

 

இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பது தெரிந்ததே 

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக அவரிடம் ஐந்து நாட்கள் மட்டும் கால்ஷீட் கேட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பார் என்பதும் தற்போது பாண்டிராஜ் இயக்கவுள்ள சூர்யாவின் படத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படம் சூர்யாவுக்கு மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த படத்தில் ஒரு முக்கிய மெசேஜ் உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

From around the web