சம்பளத்தை ஏற்றிய சூர்யா, 5 வருடமாக ஒரே சம்பளத்தில் நடிக்கும் கார்த்தி

கொரோனா வைரஸ் காலத்தில் தயாரிப்பாளர்களின் சுமையை குறைப்பதற்காக பெரிய நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்து வருவதும், பெரிய நடிகர்கள் இதற்கு எந்தவித பதிலும் கூறாமல் இருப்பது தெரிந்ததே இந்த நிலையில் சிவக்குமார் குடும்பத்தில் இருந்து வந்த நடிகர்கஇய சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் தங்கள் சம்பளத்தில் முரண்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது நடிகர் சூர்யா தற்போது சம்பளத்தை திடீரென 30 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த அவருடைய எந்த
 

சம்பளத்தை ஏற்றிய சூர்யா, 5 வருடமாக ஒரே சம்பளத்தில் நடிக்கும் கார்த்தி

கொரோனா வைரஸ் காலத்தில் தயாரிப்பாளர்களின் சுமையை குறைப்பதற்காக பெரிய நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்து வருவதும், பெரிய நடிகர்கள் இதற்கு எந்தவித பதிலும் கூறாமல் இருப்பது தெரிந்ததே

இந்த நிலையில் சிவக்குமார் குடும்பத்தில் இருந்து வந்த நடிகர்கஇய சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் தங்கள் சம்பளத்தில் முரண்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது

நடிகர் சூர்யா தற்போது சம்பளத்தை திடீரென 30 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த அவருடைய எந்த படமும் சூப்பர் ஹிட் ஆகாத நிலையில் திடீரென அவர் சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்ற ஆதங்கத்தில் தயாரிப்பாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் ’தீரன் அதிகாரம் ஒன்று’ கடைக்குட்டி சிங்கம், கைதி உள்பட தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் கார்த்திக், கடந்த ஐந்து வருடங்களாக சம்பளத்தை ஏற்றவில்லை என்றும் இப்போது வரை அவரது சம்பளம் 12 கோடி ரூபாய்தான் என்றும் கூறப்படுகிறது

ஒரே குடும்பத்திலிருந்து வந்த வந்த நடிகர்களில் ஒருவர் சம்பளத்தை ஏற்றியும் இன்னொருவர் ஐந்து வருடங்களாக ஏற்றாமல் இருப்பதும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

From around the web