திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி: திரையுலகினர் அதிர்ச்சி

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது என்பதும், இதனால் திரையரங்குகளும் பல மாதங்களாக மூடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்குப் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திரையரங்குகள் திறக்கப்பட்டன என்பதும் தற்போது தான் திரையரங்குகளில் ஓரளவுக்கு கூட்டமும் வரத்து தொடங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக மாநில திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது 

theater

தமிழகம் கேரளா ஆந்திரா உள்பட தென் மாநிலங்களில் விரைவில் இதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா உட்பட வட மாநிலங்களில் விரைவில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் அல்லது மூடப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுவதால் திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web