காலா படத்திற்கு கர்நாடகா தடை: வருத்தம் தெரிவிப்பாரா ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ளா காலா படம் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி உலகம் முழுவதும் பிரமானடாக திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில், காலா படம் கர்நாடகாவில் வெளியாகாது என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை திடீரென தடை விதித்துள்ளாது. சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் மத்திய அரசை வலியுறுத்தி
 

காலா படத்திற்கு கர்நாடகா தடை: வருத்தம் தெரிவிப்பாரா ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ளா காலா படம் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி உலகம் முழுவதும் பிரமானடாக திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில், காலா படம் கர்நாடகாவில் வெளியாகாது என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை திடீரென தடை விதித்துள்ளாது.

சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் மத்திய அரசை வலியுறுத்தி பேசியதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் படங்களை கர்நாடகாவில் வெளியாக அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் ஏற்கனவே கூறி வந்த நிலையில் காலா படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து 11 அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக சமீபத்தில் அறிவித்தன. இந்த நிலையில், அம்மாநில திரைப்பட வர்த்தக சபை காலா படத்திற்கு தடை விதித்துள்ளது.

காலா படத்திற்கு கர்நாடகா தடை: வருத்தம் தெரிவிப்பாரா ரஜினி?இதற்கு முன்னர் ‘பாகுபலி 2’ படத்தின் ரிலீஸின்போது கர்நாடக அமைப்புகள் பிரச்சனை செய்தபோது அதில் நடித்த சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததை அடுத்து அந்த படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆனது. அதேபோல் ரஜினி வருத்தம் தெரிவிப்பாரா? அல்லது தமிழர்களுக்கு ஆதரவாக கூறிய கருத்தில் இருந்து பின்வாங்காமல் இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web