"கர்ணன்" அப்டேட் அலார்ட்!

"கலைப்புலி எஸ் தாணு"வின் ட்விட்டர் பக்கம் கூறிய தகவல்!
 
"கலைப்புலி எஸ் தாணு" ட்விட்டர் பக்கம் கூறும் "கர்ணன்" படத்தின் அப்டேட்ஸ்!

தனது நடிப்பாலும், தனது எளிமையாளும் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் "நடிகர் தனுஷ்". சில நாட்களுக்கு முன்பு  தனுஷ் நடிப்பில் வெளியாகிய "அசுரன்" என்ற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தின்  ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் மக்களை மெய்சிலிர்க்க வைத்தது.

dhanush

நடிகர் தனுஷ் "வேலையில்லா பட்டதாரி"," மாரி"," பொல்லாதவன்"," ஆடுகளம்" போன்ற பல வெற்றிப் படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் வெளியாகிய "வேலையில்லா பட்டதாரி" என்ற திரைப்படம் மிகப்பெரிய "பிளாக்பஸ்டர் ஹிட்" கொடுத்தது. குறிப்பாக இளைஞர்களின் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக "நடிகை அமலாபால்" நடித்து இருந்தார்.

தற்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "கர்ணன்". சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் "பர்ஸ்ட் லுக் போஸ்டர்"
வெளியாகி மக்களிடையே வைரலாக பரவியது. இதனை பிரபல இயக்குனர் "மாரிசெல்வராஜ்" இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் "சந்தோஷ் நாராயணன்" இசை அமைத்துள்ளார் .தற்போது இப்படத்தின் ஒரு பாடல் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என "கலைப்புலி எஸ் தாணு" தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். கலைப்புலி எஸ் தாணுவின் ட்விட்டர் பக்கம் கொடுத்த இன்ப தகவல் தனுஷின் ரசிகர்களுக்கு இன்பத்தைத் கொடுத்துள்ளது. மேலும் நடிகர் தனுஷ் மற்றும் அவரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

From around the web