தனுஷ் நடிக்கும் கர்ணன் போஸ்டர்... செம அப்டேட்

ர்ணன் படம் குறித்து செம மாஸ் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் குறித்து செம மாஸ் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ஹிந்தியில் அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார்.

மேலும் ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டனியில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வருகின்ற 31-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு, கர்ணன் திரைப்படம் குறித்து ஒரு முக்கிய அப்டேட் வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்துடன் ஒரு செம மாஸான போஸ்டரும் வெளியாகியுள்ளது. இது கர்ணன் பட டீசர் பற்றியா அல்லது ரிலீஸ் குறித்த அப்டேட்டா என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

From around the web