வெளியானது கர்ணன் FirstLook Poster

எதிர்பார்ப்பை எகிர வைத்த கர்ணன் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
 

பரியேறும் பெருமாள் படத்துக்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்து உள்ளார்.

கதாநாயகியாக ரெஜினா விஜயன் நடிக்கும் இப்படத்தில் ராஜிஷா, லால், யோகிபாபு, லட்சுமி பிரியா, கவுரி கிஷன் ஆகியோரும் நடிக்கின்றனர். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக படக் குழு அறிவித்திருந்தது. இதனிடையே படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து தனுஷ் கதறி அழுவது போன்றதொரு படத்தையும் இயக்குநர் அண்மையில் தன் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


 

From around the web