வில்லனாக நடிப்பது இருக்கே... போதும்டா சாமி ஆள விடுங்க! காப்பான் வில்லன்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காப்பான், இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் சிராக் ஜானி.
இவர் தற்போது தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள “கிராக்” என்ற படத்தில் தற்போது சிராக் ஜானி வில்லனாக நடித்துள்ளார்.
மேலும் இதற்கு முன்னும் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார், தற்போது 'கிராக்' படத்தில் வில்லனாக நடித்தது குறித்து அவர் கூறியதை பார்க்கலாம்.
அதில் "தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன், காப்பான் படத்திற்கு பிறகு கிராக் படத்தில் ஒப்பந்தமானேன். பிற மொழிகளில் வில்லனாக நடிப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது, மேலும் பல கதாபாத்திரங்களில் நடிக்க நான் விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.