மீண்டும் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம்

கண்டேன் காதலை, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட வெற்றி படங்களின் இயக்குனர் கண்ணன். இவர் அதர்வாவை வைத்து இயக்கிய பூமராங் திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் அடுத்த படத்துக்காக புதிய ஸ்கிரிப்ட் தயாரித்தார் இயக்குனர் கண்ணன். இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மீண்டும் அதர்வாவை ஹீரோவாக நடிக்க வைக்க எண்ணியதுடன் மற்றொரு பாத்திரத்துக்கு சமுத்திரக்கனியை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அதர்வா நடித்த பூமராங் படத்தை ஏற்கனவே இயக்கிய நிலையில் மீண்டும் தனது இயக்கத்தில் நடிக்க அதர்வாவிற்கு
 

கண்டேன் காதலை, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட வெற்றி படங்களின் இயக்குனர் கண்ணன். இவர் அதர்வாவை வைத்து இயக்கிய பூமராங் திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை.

மீண்டும் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம்

இந்நிலையில் அடுத்த படத்துக்காக புதிய ஸ்கிரிப்ட் தயாரித்தார் இயக்குனர் கண்ணன். இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மீண்டும் அதர்வாவை ஹீரோவாக நடிக்க வைக்க எண்ணியதுடன் மற்றொரு பாத்திரத்துக்கு சமுத்திரக்கனியை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். 

அதர்வா நடித்த பூமராங் படத்தை ஏற்கனவே இயக்கிய நிலையில் மீண்டும் தனது இயக்கத்தில் நடிக்க அதர்வாவிற்கு விருப்பம் இருக்கிறதா என்பதை அறிய எண்ணினார் இயக்குனர் கண்ணன். இதுகுறித்து அதர்வாவிடமே கேட்டார். 

அதை அவர் ஏற்றுக் கொண்டார். அதர்வா மீண்டும் நடிப்பதுபற்றி கண்ணன் குறிப்பிடும்போது,’அதர்வா எனது இயக்கத் தில் நடிக்க சம்மதிப்பாரா என்ற சந்தேகத்துடன் அவரை அணுகி கேட்டபோது சம்மதம் தெரிவித்தார். மேலும் நான் பணியாற்றும் பாணி தனக்கு பிடித்திருப்பதாக அதர்வா குறிப்பிட்டார். அது எனக்கு கூடுதல் பொறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது’ என்றார்.

From around the web