பிரபல நடிகர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

பிரபல கன்னட ஆக்ஷன் ஹீரோ துருவா சார்ஜாவுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது சமீபத்தில் மாரடைப்பால் மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரர் தான் இந்த துருவா சார்ஜா என்பதும், இவர் கன்னட திரையுலகில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது துருவா சார்ஜா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நானும்
 
பிரபல நடிகர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

பிரபல கன்னட ஆக்ஷன் ஹீரோ துருவா சார்ஜாவுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது

சமீபத்தில் மாரடைப்பால் மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரர் தான் இந்த துருவா சார்ஜா என்பதும், இவர் கன்னட திரையுலகில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது துருவா சார்ஜா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நானும் எனது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோம். இருப்பினும் எங்கள் இருவருக்கும் லேசான கொரோனா அறிகுறி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம். இருவரும் நலமாக இருக்கின்றோம். விரைவில் குணமாகிவிடுவோம் என்பது எங்களுக்கு தெரியும். இருப்பினும் எங்களுடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தயவுசெய்து உங்களை சோதித்துப் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

From around the web