இயக்குனராகும் வரலட்சுமிக்கு கனிமொழி எம்பி வாழ்த்து: போஸ்டரை வெளியிட்ட 50 பெண்கள்!

 

நடிகை வரலட்சுமி கண்ணாம்பூச்சி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இயக்குனராகும் வரலட்சுமிக்கு ஏற்கனவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் அனைவருமே வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் தற்போது திமுக எம்பி கனிமொழி அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

அவர் இதுகுறித்து கூறியதாவது: இயக்குனராக அறிமுகமாகும் வரலட்சுமிக்கு வாழ்த்துக்கள். வலிமையாக பெண்ணாக மாறும் வரலட்சுமிக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை வரலட்சுமி இயக்குனராக இருக்கும் கண்ணாம்பூச்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒரே நேரத்தில் திமுக எம்பி கனிமொழி உள்பட 50 பெண் பிரபலங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

ஒரு பெண் இயக்குனருக்கு சக பெண்கள் வாழ்த்து தெரிவித்து ஆதரவு தெரிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளது சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கண்ணாம்பூச்சி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் வரலட்சுமி அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவும் செய்கிறார் 

மேலும் இந்த படம் வெற்றி பெற்றால் அவர் தொடர்ச்சியாக படங்களை இயக்குவார் என தெரிகிறது. தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இருக்கும் நிலையில் மேலும் ஒரு பெண் இயக்குநர் சாதிக்க வேண்டும் என்பதே அனைவரது ஆசையாக உள்ளது


 

From around the web