சிவகார்த்திகேயனின் ‘கனா’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்து வரும் ‘கனா’ படத்தை அவரது நண்பர் அருண்காமராஜ் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. சத்யராஜ்,
 

சிவகார்த்திகேயனின் ‘கனா’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்து வரும் ‘கனா’ படத்தை அவரது நண்பர் அருண்காமராஜ் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பா-மகளாக நடித்து வரும் இந்த படத்தில் நடிகர் தர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்த படத்தை ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web