கமல் கோரிக்கை நிராகரிப்பு: வாரிசு நடிகர்களுக்கு இல்லை வாய்ப்பு!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வாரிசு நடிகர்கள் கலந்துகொள்ள இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஒருவர் நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர், இன்னொருவர் நடிகர் நாசரின் மகன் அபிஹாசன். மேலும் இவர்களை கமல்ஹாசனே பரிந்துரை செய்ததாகவும் கூறப்பட்டது 
ஆனால் தற்போதைய நிலைப்படி கமலஹாசன் பரிந்துரையை விஜய் டிவி நிர்வாகம் ஏற்கவில்லை என்றும் இதனால் ஆதித்யா பாஸ்கர் மற்றும் அபிஹாசன் ஆகிய இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது 

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராக இருந்தாலும் பிக்பாஸ் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் கமல் தலையிடுவதை விஜய் டிவி நிர்வாகம் விரும்பவில்லை என்றும் அதனால்தான் அவர் பரிந்துரை செய்தவர்களை விஜய் டிவி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஷிவானி, வேல்முருகன், ஆஜித், கேப்ரில்லா, அர்ச்சனா, நடிகை ரேகா, அனுமோகன் ஜித்தன் ரமேஷ் ஆகியோர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று உறுதி செய்யப்படாத தகவல் வெளிவந்துள்ளது

From around the web