அக்சராஹாசனுக்கு பாட்டியாக நடிக்கும் கமல் பட நடிகை!

கமல்ஹாசன் நடித்த ‘மேல்நாட்டு மருமகள்’ மற்றும் ‘மன்மதன் அம்பு’ ஆகிய படங்களில் நடித்தவர் பழம்பெரும் பாடகி உஷா உதூப். இவர் தற்போது 10 வருடங்களுக்கு பின் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தில் அவர் கமல் மகள் அக்சராஹாசனின் பாட்டியாக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தினை இயக்கும் இயக்குனர் ராஜமூர்த்தி கூறியதாவது: 

இத்தருணம்‌ மிகப்பெரும்‌ பெருமை தரக்கூடியது. வரலாற்று சாதனை நிகழ்த்தியள்ள ஆளுமையான பாடகி உஷா உதுப்‌ அவர்களுடன்‌ பணிபுரிய கிடைத்திருக்கும்‌ இந்த வாய்ப்பு மிகப்பெரும்‌ பாக்கியம்‌ ஆகும்‌. மேலும்‌ 10 வருடத்திற்கு பிறகு ஒரு தமிழ்‌ படத்தில்‌ அதுவும்‌ எங்கள்‌ படம்‌ மூலம்‌ அவரை தமிழில்‌ நடிக்க அழைத்து வருவது எங்களுக்கு பெருமையே. 

௮வர்‌ இப்படத்தில்‌ கர்னாடக சங்கீத வித்தகராக, ௮க்‌ஷரா ஹாசனின்‌ பாட்டியாக நடிக்கிறார்‌. படத்தில்‌ அவரது கதாப்பாத்திரம்‌ அவரது இயல்பு வாழ்விற்கு முற்றிலும்‌ நேரெதிரானது. ஆனால்‌ அவர்‌ இக்கதாப்பாத்திரத்தில்‌ கச்சிதமாக பொருந்திப்‌ போவார்‌. மிகப்பிரபல பாடகி, மிகச்சிறந்த ரடிகர்‌ என்பதை தாண்டி, அனைவரிடமும்‌ மிக எளிமையாக பழகும்‌ ௮வரது அன்பான இயல்பு, ௮வரது துறுதுறுப்பு படக்குழுவில்‌ அனைவரிடமும்‌ பெரும்‌ உற்சாகத்தை கொண்டு வந்திருக்கிறது. ௮வர்‌ முற்றிலும்‌ இயக்குநரின்‌ நடிகை, அவருடன்‌ இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. 

இறுதியாக அவர்‌ நமது உலக நாயகன்‌ கமலஹாசன்‌ அவர்களுடன்‌ திரையில்‌ நடித்திருந்தார்‌. தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது மகள்‌ ௮க்சஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிப்பது மேலும்‌ ஒரு சிறப்பு.

From around the web