கமல் ஒன்சைடாக பேசுகிறார்: அனிதாவின் திடுக்கிடும் குற்றச்சாட்டு!

 

கமலஹாசன் ஒன்சைடாக பேசுகிறார் என்றும் தன்னை பேசவே விடமாட்டேன் என்கிறார் என்றும் அனிதா குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மூன்று வருடங்கள் தொகுத்து வழங்கி விட்டு தற்போது நான்காவது வருடமாக தொகுத்து வழங்குகிறார். இதுவரை எந்த போட்டியாளரும் அவர் ஒன்சைடாக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டை சுமத்தியது இல்லை. ஆனால் முதல் முறையாக அனிதா, கமல் குறித்து பேசியபோது கமல் ஒன்சைடாக பேசுவதாகவும் என்னை பேசவே விடமாட்டேன் என்கிறார் என்றும், ஆரியை மட்டுமே பேச பேச வைத்து அவர் பேசுவதை மட்டுமே அவர் ஆமோதிக்கிறார் என்றும் கூறினார் 

anitha

அதற்கு சனம்ஷேட்டிட்டி அதெல்லாம் இல்லை, உனக்கு சுமங்கலி பிரச்சினையின் போது கூட கமல் ஆதரவு தெரிவித்தார். இப்போது உன்னை பற்றி ஏதாவது புகார் வந்திருக்கலாம். அதனால் நீ ஒன்றும் மனதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று கூறினார். அதற்கு மீண்டும் அனிதா ’நான் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை என்ன பேசவே விடமாட்டேன் என்கிறார் என்று கமல் மீது குற்றச்சாட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

கமல் குறித்து ஒரே ஒரு வார்த்தை சர்ச்சைக்குரியதாக பேசியதால் கடந்த சீசனில் வேறு ஒரு காரணத்தை காட்டி சரவணன் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. அந்தவகையில் இந்த வாரம் அனிதா நாமினேஷனில் சிக்கி உள்ளதால் அவர் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது


 

From around the web